பாசிப்பயறு கடைந்தது தேவையானவை: பாசிப்பயறு - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒர...

பாசிப்பயறு கடைந்தது
தேவையானவை: பாசிப்பயறு - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, தனியா - 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பயறை வெறும் கடாயில் நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். சிறிது மஞ்சள்தூள் சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் இறக்கிவையுங்கள். பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, தனியா ஆகிய எல்லாவற்றையும் போட்டு வதக்கி, வேகவைத்த பயறோடு சேர்த்து, உப்பு போட்டு மீண்டும் நன்கு வேகவிடுங்கள். வெந்தபிறகு, நன்கு கடைந்துவிடுங்கள். மீதி எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, லேசாகக் கடைந்துவிட்டு பரிமாறுங்கள். சூடான சாதத்தில், கடைந்த பயறும் நெய்யும் விட்டு சாப்பிட்டால்.... ஆஹா! அதுவன்றோ சொர்க்கம்!
குறிப்பு: குக்கரில் செய்வதைவிட, பாத்திரத்தில் வேகவைத்து கடைவதுதான் தனி ருசி தரும்.
Post a Comment