ஹோட்டலில் செய்வது போல், வீட்டில் செய்கிற ரவா தோசை முறுகலாக, பொத்தல் பொத்தலாக, மெலிதாக வருவதில்லையே... ஏன்..? இது ஒன்றும் பெரிய கம்ப சூத்தி...

ஹோட்டலில் செய்வது போல், வீட்டில் செய்கிற ரவா தோசை முறுகலாக, பொத்தல் பொத்தலாக, மெலிதாக வருவதில்லையே... ஏன்..?
இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை மல்லிகா. ரவா தோசைக்கே மாவின் அளவுதான் மிகவும் முக்கியம். மூன்று பங்கு ரவைக்கு ஒரு பங்கு அரிசி மாவு, அரைப் பங்கு மைதா எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உப்பு சேர்த்து, நன்றாகக் கரைத்துக் கொள்ளுங்கள். கரைத்த மாவை அரை மணி நேரம் ஊற வையுங்கள். மாவு ஊற ஊற, கெட்டியாகி விடும். பிறகு வேண்டுமளவு தண்ணீர் ஊற்றி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து ரவாதோசை ஊற்றலாம். ரவா தோசைக்கு மட்டும், தோசைக்கல் நன்கு சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஹோட்டலில் செய்வது போல் நன்கு முறுகலாக பொத்தல் பொத்தலாக தோசை வரும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மாவு நீர்க்கத்தான் இருக்க வேண்டும்.
Post a Comment