தக்காளி முட்டை சூப் தேவைப்படும் பொருட்கள்: * தக்காளி- 4 * கோழி இறைச்சி வெந்த நீர்- 3 கப் * பெரிய வெங்காயம்- 1 * முட்டை - 1 செய்முறை: * ...

தக்காளி முட்டை சூப்
தேவைப்படும் பொருட்கள்:
* தக்காளி- 4
* கோழி இறைச்சி வெந்த நீர்- 3 கப்
* பெரிய வெங்காயம்- 1
* முட்டை - 1
செய்முறை:
* தக்காளியை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
* கோழி இறைச்சி, அதன் எலும்பு, தோல் போன்றவைகளைப் போட்டு வேகவைத்த நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது காய்கறி வேகவைத்த நீராகவும் இருக்கலாம்.
* பெரிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
* தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவைகளோடு கோழி இறைச்சி வெந்த நீரையும் சேர்த்து வேகவிடுங்கள். தக்காளியும், வெங்காயமும் வெந்து வரும்போது உப்பும், மிளகுதூளும் சேருங்கள். எல்லாம் சேர்ந்து கொதித்து வரும்போது ஒரு முட்டையை நன்றாக அடித்து கலக்கி அதில் சேருங்கள். முட்டை கெட்டியாகி விடாத அளவுக்கு சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கலக்கிக் கொடுக்கவேண்டும்.
* அடுப்பில் இருந்து இறக்கி மல்லி இலை, செலரி, ஸ்பிரிங் வெங்காயம் போன்றவைகளை நறுக்கி சேருங்கள். அத்தோடு ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், தக்காளி சாஸ் கலந்து ருசியுங்கள்.
Post a Comment