கம்பு வடை தேவையானவை: கம்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு & தலா அரை கப், புழுங்கல் அரிசி & கால் கப், பச்சைமிளகாய் & 4 அல்லது 5...

கம்பு வடை
தேவையானவை: கம்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு & தலா அரை கப், புழுங்கல் அரிசி & கால் கப், பச்சைமிளகாய் & 4 அல்லது 5, இஞ்சி & ஒரு துண்டு, கறிவேப்பிலை & சிறிது, பொடியாக நறுக்கிய வெங்காயம் & அரை கப், உப்பு, எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: கம்பை நன்றாக களைந்து அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். உளுந்து, கடலைப்பருப்பை ஒன்றாக ஊற வைக்கவும். கம்பு, அரிசியை கெட்டியாக அரைத்து பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கடைசியில் ஊறிய உளுந்து, கடலைப்பருப்பை அதில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பிசைந்து சின்ன சின்ன வடைகளாக தட்டிப் பொரித்தெடுக்கவும்.
இந்த வடை சூடாக சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.
Post a Comment