எனக்கு நீண்ட நாட்களாக ரசகுல்லா செய்ய வேண்டும் என்ற ஆசை. ரசகுல்லா வீட்டிலேயே செய்ய முடியுமா? எப்படிச் செய்வது? ஒரு லிட்டர் பசும்பாலை நன்கு ...

எனக்கு நீண்ட நாட்களாக ரசகுல்லா செய்ய வேண்டும் என்ற ஆசை. ரசகுல்லா வீட்டிலேயே செய்ய முடியுமா? எப்படிச் செய்வது?
ஒரு லிட்டர் பசும்பாலை நன்கு கொதிக்க விடவும். 250 மி.லி தண்ணீரில் 20 மி.லி வினிகரைச் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். கொதித்து ஆறிய பாலில் வினிகர் கலந்த நீரை விட்டால், பால் திரிந்து விடும். திரிந்த பாலில், தண்ணீரை வடிகட்டி விட்டு, அதை, சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 1லு கிலோ சர்க்கரையை லு லிட்டர் தண்ணீரில் போட்டு, சிறிது பால் விட்டு சர்க்கரையிலுள்ள அழுக்கை நீக்கி, கொதிக்கும் சர்க்கரைக் கரைசலில், உருட்டிய உருண்டைகளைப் போட்டு நன்றாக வேக விடவும். உருண்டைகள் நாம் உருட்டிய அளவை விட இரண்டு மடங்கு பெரிதாக வரும் போது, அந்த உருண்டைகள் மேலாக மிதக்க ஆரம்பிக்கும்.
இன்னொரு பாத்திரத்தில், கொஞ்சமாக சர்க்கரை ஜீராவை வைத்துக் கொண்டு, வெந்த உருண்டைகளை எடுத்து, ஜீராவில் போட்டு ஊற விடவும். இது போல் ரசகுல்லா செய்தால், ரசகுல்லா நன்கு சாஃப்ட்டாக இருக்கும்.
Post a Comment