அக்கார அடிசில் தேவையானவை: பச்சரிசி - அரை கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய்...

அக்கார அடிசில்
தேவையானவை: பச்சரிசி - அரை கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, ஏலக்காய் - 5, பால் - 2 கப், பொடித்த வெல்லம் - 2 கப்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுக்கவும். பிறகு, அதே நெய்யில் அரிசியையும் பருப்பையும் சிவக்க வறுத்து, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். இது முக்கால் பதமாக வெந்ததும், பாலை இதோடு சேர்க்கவும்.
இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டி மண் நீக்கவும். இந்த வெல்ல நீரை, பால் சேர்த்த அரிசிக் கலவையில் சேர்த்து நன்கு கிளறவும். சிறிது கெட்டியானதும், ஏலக்காயைப் பொடித்துத் தூவிக் கிளறவும். நன்கு சேர்த்துக் கிளறியதும், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
சுடச் சுட அக்கார அடிசில் தயார். -அருமையான இனிப்பு இது.
அக்கார அடிசில்: இதை குக்கரிலும் செய்யலாம். தேவையான தண்ணீர், பால் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கி, ஏலம், முந்திரி சேர்த்துக் கிளறினால் போதும். தண்ணீருக்கு பதில் பால் மட்டுமே சேர்த்து செய்தால், இன்னும் சுவை கூடும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment