கேரளா ஸ்பெஷல்! புட்டு தேவையானவை: புட்டரிசி - 4 கப், உப்பு - சிறிதளவு, தேங்காய் துருவல் - சிறிதளவு. செய்முறை: அரிசியை கழுவி, ஊறவைத்து, ஊறி...

கேரளா ஸ்பெஷல்! புட்டு
தேவையானவை: புட்டரிசி - 4 கப், உப்பு - சிறிதளவு, தேங்காய் துருவல் - சிறிதளவு.
செய்முறை: அரிசியை கழுவி, ஊறவைத்து, ஊறியதும் நிழலில் உலர வையுங்கள். சற்று ஈரமிருக்கும்போதே மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை சிறிது சிறிதாக வறுத்து, சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மாவிலிருந்து தேவையான அளவு எடுத்து, உப்பு கரைத்த தண்ணீரை தெளித்துப் பிசறுங்கள். இந்த மாவு சற்று ஈரமாக இருக்க வேண்டும்.
குழாய்ப்புட்டு குழாயில் இரண்டு கை மாவைப் போட்டு, அதன் மேல், சிறிது தேங்காய் துருவலை போடுங்கள். மீண்டும், மாவு, தேங்காய் என்ற வரிசையில் போட்டு, குழாயை நிரப்புங்கள். குழாய்ப்புட்டு பானையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, புட்டுக் குழாயை வைத்து, வேகவிடுங்கள். குழாயின் மேலே ஆவி வந்ததும் எடுத்துப் பரிமாறலாம். கடலைக் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவையோ சுவை!
Post a Comment