வாழைப்பூ வடை தேவையானவை: வாழைப்பூ & 2 கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் & 1, துவரம்பருப்பு & அரை கப், காய்ந்த மிளகாய் & 12, ச...

வாழைப்பூ வடை
தேவையானவை: வாழைப்பூ & 2 கைப்பிடி அளவு, பெரிய வெங்காயம் & 1, துவரம்பருப்பு & அரை கப், காய்ந்த மிளகாய் & 12, சோம்பு & அரை டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, எண்ணெய் & 1 கப், கறிவேப்பிலை, மல்லித்தழை & சிறிது.
செய்முறை: வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை ஊறவைத்துப் பெருவெட்டாக அரைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் முதல் உப்பு வரையிலான பொருட்களை, லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும். அத்துடன் அரைத்த விழுது, பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.
Post a Comment