சோளாபூரி எப்படிச் செய்வது? ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் விலை கட்டுப்படியாவதில்லை. என் குழந்தையோ அடிக்கடி சோளா பூரி கேட்கிறான்? அரை கிலோ ம...

சோளாபூரி எப்படிச் செய்வது? ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் விலை கட்டுப்படியாவதில்லை. என் குழந்தையோ அடிக்கடி சோளா பூரி கேட்கிறான்?
அரை கிலோ மைதாவை எடுத்துக் கொள்ளவும். 100 மில்லி தண்ணீரில், சிட்டிகை ஆப்பச்சோடா, சிறிது உப்பு இரண்டையும் கலந்து, அந்தத் தண்ணீரை மைதா மாவில் சேர்த்து தேக்கரண்டி எண்ணெயும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். குறைந்தது 2
½ மணி நேரம் மாவை ஊற வைக்க வேண்டியது அவசியம். பிறகு மாவை உருண்டைகளாக உருட்டி அப்பளமாகத் தேய்த்து, பெரிய வாணலியில், நிறைய எண்ணெய் ஊற்றி பூரிகளாகப் பொரித்தெடுக்கவும். மாவுடன் 6 பிரட் துண்டுகள் சேர்த்துப் பிசைந்தால் சோளாபூரி தட்டையாகாமல், உப்பலாக வரும்.
Post a Comment