பூண்டு-உளுந்து சாதம் தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கறுப்பு முழு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, தேங்க...

பூண்டு-உளுந்து சாதம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், கறுப்பு முழு உளுந்து - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 10, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி!
இதற்குத் தொட்டுக்கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Post a Comment