கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே. காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு ...

கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே. காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும். வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும். தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும். பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும். குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது. கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும். நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தெளிவடையும். உடலில் தசைப்பற்று உண்டாகும். பதநீர் குடித்தால் பற்களில் ஏற்படும் ஸ்கர்வி நோய் குணமாகும். பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும். பாலில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். எடை கூடும். சருமம் பளபளக்கும். கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். இதைப் போக்க தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தைப் பறித்து அதனுடன் துளசி இலைகள் மூன்றைச் சேர்த்து மென்று காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். சம்பா அரிசியை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தோலின் தன்மை மென்மையாக மாறுவதுடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும். கண்களில் குளிர்ச்சியை உண்டாக்க தாமரைப் பூவை கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொண்டால் போதும். இளநீரை தினமும் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும். உடல் சோர்வு அகலும். அதிகமாக உழைக்கும் மனித உறுப்புகளில் கண்களுக்கு பெரும் பங்கு உண்டு. கண்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் முதலில் அதற்கு ஓய்வு தேவை. எப்போதும் ஓய்வுக்குப் பின் புத்துணர்வு கிடைக்கும். கண்களின் வளமைக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும். மாதம் ஒரு முறை மெல்லிய மசாஜ் செய்யவேண்டும். பெண்கள் பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் வளமை பெறும். இளநீருடன் சந்தனத்தை சேர்த்து உடலில் தடவி குளித்தால் உடல் குளர்ச்சி ஏற்படும். கழிவு நீர் வெளியேறி விடும். தினமும் ஏதாவதொரு பழ ஜுஸ் அருந்தி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் கிடைக்கும். பிளம்ஸ் பழமும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். எலுமிச்சை சாறு தடவி ஊறிய பின் குளித்து வந்தால் சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1213933479105680277

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item