உடம்பில் சதை போட எள்ளுப் பொடி

எள்ளுப் பொடி உடம்பில் சதை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய எள்ளுப் பொடி பற்றி இப்போது பார்ப்போம்: எள்ளுப்பொடிக்குத் தேவைய...

எள்ளுப் பொடி உடம்பில் சதை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய எள்ளுப் பொடி பற்றி இப்போது பார்ப்போம்: எள்ளுப்பொடிக்குத் தேவையான பொருள்கள்: எள்ளு - 500 கிராம் மிளகாய் வற்றல் - 10 அல்லது 12 உப்பு ஒன்றரை மேசைக்கரண்டி - அல்லது அவரவர் தேவைப்படி பெருங்காயப் பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி கறுப்பு எள்ளாக இருந்தால் வேலை சற்றுக் கடினமாகும். கறுப்பு எள்ளைத் தண்ணீரில் நன்றாய்க் களைந்து தூசுதும்புகளை நீக்கிய பின் ஒரு வடிகட்டியில் தண்ணீர் போக வடியவைக்க வேண்டும். நீர் முற்றாக வடிந்த பிறகு அதைத் தரையில் கொட்டி ஒரு கெட்டித் துணியால் நன்றாய்த் தேய்க்க வேண்டும். அதன் மேலுள்ள கறுப்பு அப்போது பெருமளவு நீங்கும். (ஒருகால் அது உடலுக்குக் கேடு செய்யுமோ என்னமோ. அதனால்தான் வெளித்தோல் போகத் தேய்க்கச் சொல்லுகிறார்கள் என்று தோன்றுகிறது.) பிறகு அதை இரும்புக் கடாயில் படபடவென்று பொரிகிற வரை வறுக்க வேண்டும். வெள்ளை எள்ளாக இருந்தால் இந்தச் 'சிங்கிநாதம்' தேவை யில்லை. களைந்து, தூசு போக்கி, வடிகட்டிவிட்டு அப்படியே கடாயில் கொட்டி வறுக்கலாம். தரையில் கொட்டித் தேய்த்துக்கொண்டிருக்கத் தேவை யில்லை. பிறகு மிளகாயை இரண்டு முட்டை (சிறு கரண்டி) நல்லெண்ணெய்யில் வறுக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பையும் பெருங்காயப் பொடியையும் சேர்த்து மின் அம்மியில் பொடிக்க வேண்டும். சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். (நெய்யைவிடவும் எண்ணைய் பெரும் பாலோர்க்கு அதிகச் சுவையாக இருக்கும்.) இதனை இட்டிலி, தோசைகளுக்கும் எண்ணெய்யில் கலந்து இட்டிலி-மிளகாய்ப்பொடிபோல் தொட்டுக்கொள்ளவும் செய்யலாம். உடம்பு அதிகப் பருமனும் இல்லாமல், ஒல்லிக்குச்சியாகவும் இல்லாமல் நிதானமாக இருப்பவர்கள் கொள்ளுப்பொடி, எள்ளுப்பொடி இரண்டையும் ஒரு சேர உட்கொண்டால் உடம்பு பருக்கவும் செய்யாமல், இளைக்கவும் செய்யாமல் அப்படியே நிலைக்கும்தானே!

Related

சமையல் குறிப்புகள் 5044272003222596295

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item