மாடுகளுக்கு எந்த நேரத்தில் கருவூட்டல் செய்யலாம்?
பிறந்து 12 மாதங்கள் கடந்த கன்றுகளை, கிடாரிகள் என்று அழைக்கப்படும். வளரும் சீதோஷ்ண நிலை, இனத்தின் தன்மை, ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்து, ...

https://pettagum.blogspot.com/2017/12/blog-post_9.html
பிறந்து 12 மாதங்கள் கடந்த கன்றுகளை, கிடாரிகள் என்று அழைக்கப்படும்.
வளரும் சீதோஷ்ண நிலை, இனத்தின் தன்மை, ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்து,
கலப்பின கிடாரிகள் 8-லிருந்து 18-வது மாதத்திற்குள் பருவத்துக்கு வந்துவிட
வேண்டும். இதில் நாட்டு மாட்டு கிடாரிகள் பருவத்துக்கு வருவதற்கு 24
மாதங்கள் ஆகும். இந்த மாதங்களுக்குள் பருவத்துக்கு வரவில்லையென்றால்,
அந்தக் கிடாரிக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
உடனே, அதற்குத் தகுந்த மருத்துவத்தை அளிக்க வேண்டும். பொதுவாக, பருவ சுழற்சி காலம் 21 நாள்களுக்கு ஒருமுறை வரும். சினை பருவத் தருணம் 18 மணிநேரத்திலிருந்து 24 மணிநேரம் வரை இருக்கும். இதில் கோடைக்காலத்தில் சினைப் பருவத்தருணம் ஏறக்குறைய 18 மணி நேரமாகவும் குளிர்காலத்தில் 24 மணி நேரமாகவும் இருக்கும். அதற்குள் இயற்கை அல்லது செயற்கை முறையில் கருவூட்டல் செய்துவிட வேண்டும்.
கிடாரியானது பருவத்துக்கு வரும்போது அதன் உடல் எடையைக் கருத்தில்கொண்டு, கருவூட்டல் செய்வது அவசியம். அதாவது, கிடாரியின் எடை தாயின் எடையிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாடு 300 கிலோ எடையில் இருக்கிறது என்றால் கிடாரியின் எடை 180- லிருந்து 200 கிலோ இருக்க வேண்டும். இந்த எடை விகிதம் வரவில்லையென்றால் சினை ஊசி போடக் கூடாது.
ஏனெனில், இந்த கிடாரிகளுக்கு இடுப்பெலும்பு சரியான வளர்ச்சி பெற்றிருக்காது. கன்று போடுவதற்கு இடுப்பெலும்பு நன்றாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் கன்றுகளை எளிதாக ஈனும். எனவே, மாடுகளில் அதன் எடை அவசியமானது. என்னுடைய அனுபவத்தில் 200 மாடுகளுக்குச் சிசேரியன் செய்து கன்றுகளை எடுத்திருக்கிறேன். அவற்றில் 70 மாடுகள் இடுப்பெலும்பு வளர்ச்சி பெறாததால், கன்று ஈனுவதற்குச் சிரமப்பட்டவை. அதனால், கருவூட்டல் செய்வதற்கு முன்பு, அந்தக் கிடாரியின் எடையை அறிந்து கருவூட்டல் செய்ய வேண்டும்.
சினைப் பருவத் தருணத்தைக் கண்டறிவது எப்படி?
எருமையோ, பசுவோ சினைப் பருவத் தருணத்துக்கு வந்துவிட்டால் சில அறிகுறிகளைக் காட்டும். மாடுகளின்மீது தாவும் அல்லது மற்ற மாடுகளைத் தன்மீது தாவ அனுமதிக்கும். தீவனம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாது. வாலைத் தூக்கிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும். அதுவும் அடிவயிற்றிலிருந்து கத்தும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு வழியும். இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் ‘முடை அடிக்குது’ என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் ‘மாசி அடிக்குது’ என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘அழுக்கு அடிக்குது’ என்றும், நாமக்கல் மாவட்டத்தில் ‘கொழ அடிக்குது’ என்றும், தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘வழுவு அடிக்குது’ என்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘மாசி ஆடுது’ என்றும் சொல்வார்கள்.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டவுடன் முதல் 8 மணி நேரத்தை (முன் சினைப் பருவத் தருணம்) விட்டுவிட வேண்டும். அதேபோன்று கடைசி 8 மணி (சினைப் பருவத் தருணத்தின் கடைசி நிலை) நேரத்தை விட்டுவிட வேண்டும். இடையிலுள்ள 8 மணி நேரத்தில் (மைய சினைப் பருவத் தருணம்) சினை ஊசி போட வேண்டும். இந்த இடைப்பட்ட 8 மணிநேரத்தில்தான் கருப்பையில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் விந்தணுக்கள் உள்ளே நுழையும்போது, அதனோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் கருப்பைக்குள் நுழைய வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கிருமிகளின் தாக்குதலை இது தடுத்துவிடும்.
இந்த நேரத்தைக் கடந்து கருவூட்டல் செய்யும்போது நோய்க்கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது. கருவூட்டலை எப்போது செய்ய வேண்டும் என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பருவ அறிகுறிகள் காலையில் தென்பட்டால் மாலையிலும் மாலையில் தென்பட்டால் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.
அதேபோன்று முதல் 8 மணி நேரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற சந்தேகம் வரலாம். இனப்பெருக்க உறுப்பிலிருந்து வழியும் திரவ ஒழுக்கு நீர் போன்று தரையில் விழுந்து, ஓடக்கூடியதாக இருந்தால் அது முதல் 8 மணி நேரத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் சளி போன்ற கட்டியான திரவ ஒழுக்கு இருந்தால் அது சினைப் பருவத் தருணத்தின் கடைசி நிலை. இனப்பெருக்க உறுப்பின் வெளிப்புறத்திலிருந்து தரையை நோக்கி நூல் போன்று தொங்கிக் கொண்டிருக்கும். அதுதான் மைய சினைப் பருவத் தருணம்.
இதை இன்னொரு முறையிலும் கண்டறியலாம். வெல்லப்பாகைத் தொட்டுப் பார்ப்பதுபோல், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே இரண்டு சொட்டு ஒழுக்குத் திரவத்தை வைத்து, பிறகு விரல்களைப் பிரித்தால், திரவமானது நெகிழ்வுத் தன்மையுடன் (விரல்களை ஒட்டிக்கொண்டே 10-லிருந்து 20 சென்டிமீட்டர் நீளத்துக்கு நூல்போல் இருக்கும்) இருந்தால், அது மைய சினைப் பருவத் தருணம் என்று அறிந்துகொள்ளலாம்.
மாடுகளைக் கருவூட்டல் செய்யுமிடத்துக்கு அழைத்துப் போகும்போது வெயில் நேரத்திலோ, அடித்தோ, உதைத்தோ அழைத்துச் செல்லக் கூடாது. அங்கே சென்றவுடன் அவசரகதியில் கருவூட்டல் செய்யக் கூடாது. ஏனென்றால், மாடுகள் தூரத்திலிருந்து வந்திருக்கும். வந்த இடத்தில் பயம், மிரட்சி இருக்கும். அப்போது ‘அட்ரினலின்’ என்ற ஹார்மோன் சுரந்து கருப்பைக்குச் செல்கிற ரத்தக் குழாய்களை (நாளங்கள்) சுருங்கச் செய்துவிடுவதால், மூளையிலிருந்து சுரக்கும் ஆக்கிடோசின் கருப்பைக்குச் சென்று சேராது. இதனால், கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்பட்டு, உள்ளே செலுத்தும் விந்தணுக்களானது கருக்குழலுக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்படும். இதனால், கரு பிடிக்காமல் போய்விடுவதற்கு வாய்ப்புண்டு. அதனால், அரைமணிநேரம் கழித்தே கருவூட்டல் செய்ய வேண்டும். கருவூட்டல் செய்த பிறகு, உடனே மாடுகளை அழைத்துச் செல்லக் கூடாது, 15 நிமிடங்கள் ஓய்வு கொடுத்த பிறகே அழைத்துச் செல்ல வேண்டும்.
முன்பெல்லாம் மாடுகளுக்குக் கருவூட்டல் செய்யும்போது, மாடுகளுடைய கருப்பையின் வெளிப்புறத்தில் விந்தானது சேகரிக்கப்படும். இதனால், விந்து வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்தது. அதனால், மாடுகளை உடனே படுக்கவிடாமல், கயிற்றைத் தூக்கிக் கட்டிவிடுவார்கள் விவசாயிகள். தீவனம், தண்ணீர் கொடுக்கமாட்டார்கள். அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது. தற்போது கருப்பையின் மையப்பகுதியிலேயே விந்தணுக்கள் கொண்டுசென்று செலுத்தப்படுகிறது. அதனால், பழைய முறைகளைக் கையாளத் தேவையில்லை. மாடுகளை வழக்கம்போல் விட்டுவிடலாம். வெயில் நேரமாக இருந்தால், குளிர்ந்த நீரை மாட்டின்மீது தெளித்துவிட்டால் போதும்.
இதை முறையாகக் கடைப்பிடித்து, கருவூட்டல் செய்தால், மாடுகள் எளிதில் சினைக்கு வந்துவிடும். உலக அளவில் செயற்கை முறை கருவூட்டல் செய்வதன்மூலம் 40%தான் சினைப்பிடிக்கின்றது. அதை 80% வரை உயர்த்த வேண்டும். அதற்கு மேற்கண்ட முறைகளைச் சரியாகக் கையாண்டால் சினைப்பிடிக்கும் விகிதத்தை அதிகரிக்கலாம்.
- கறக்கும்
தீவன மேலாண்மைக்கு மொபைல் செயலி...
மொபைல் செயலி குறித்துக் கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநர் ரமேஷ் சரவணகுமார் பேசியபோது, “மாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை முக்கியமானது. அதிக தீவனமும் கொடுக்கக் கூடாது. அதேசமயம் குறைந்தளவும் கொடுக்கக் கூடாது. எவ்வளவு எடையுள்ள மாடுகளுக்கு, எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும். அதேபோன்று எத்தனை லிட்டர் பால்கொடுக்கும் மாடுகளுக்கு, எவ்வளவு தீவனம் கொடுப்பது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம். பாரம்பர்யமாக மாடு வளர்ப்போருக்கு, எப்போது, எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும் என்பது தெரியும்.
ஆனால், புதிதாக மாடு வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு வசதியாகத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘ஃபீட் கால்குலேட்டர்’ (Feed Calculator) என்ற பெயரில் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. இதில் எவ்வளவு எடையுள்ள மாட்டுக்கு எவ்வளவு தீவனம் கொடுக்கலாம், எத்தனை லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு எவ்வளவு தீவனம் வழங்கலாம் என்ற விவரங்கள் இருக்கும்.
அதேசமயம் கலப்புத் தீவனங்கள் தயாரிப்பதற்கான முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, அங்கே ‘டனுவாஸ் ஃபீட் கால்குலேட்டர்’ (TANUVAS-Feed Calculator) என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால், இந்தச் செயலி காட்டும். அதை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதை இணைய வசதி இல்லாத நேரத்திலும் (ஆஃப்லைனில்) பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.”
மாடுகளின் எடை
1. ஜெர்சி கலப்பின மாடு, 350-450 கிலோ வரை.
2. ஹோல்ஸ்டின் பிரீஷியன் (எச்.எஃப்), 450-550 கிலோ வரை.
3. சிவப்பு சிந்தி, 300-350 கிலோ வரை
4. சாஹிவால், 300-400 கிலோ வரை.
5. தார்பார்க்கர், 400-450 கிலோ வரை.
6. காங்கேயம், 350-450 கிலோ வரை.
வெச்சூர், கொல்லிமலை போன்ற உயரம் குறைவான சிறிய வகை மாடுகள்,
130-150 கிலோ வரை.
இதில் தாயின் எடையில் கிடாரிகள் 60 சதவிகிதம் இருந்தால், அந்தக் கிடாரிகளுக்குத் தாராளமாகக் கருவூட்டல் செய்யலாம்.

Post a Comment