தாய்...தந்தை... மனதைத் தொட்ட வரிகள் !
வில்லனாக சில பிள்ளைகள் பார்ப்பதுண்டு. ஆனால், ”நீ ஹீரோவாக வேண்டும். சீரோவாகி விடக் கூடாது” என்று எண்ணுகிறவன் தந்தை. தந்தை ஒரு காவல்காரன...

வில்லனாக சில பிள்ளைகள் பார்ப்பதுண்டு. ஆனால், ”நீ ஹீரோவாக வேண்டும். சீரோவாகி விடக் கூடாது” என்று எண்ணுகிறவன் தந்தை.
தந்தை ஒரு காவல்காரன், கண்டிப்பாகத் தான் இருப்பான்.
அவனுக்கு பொறுப்புக்கள் இருக்கிறது.
தந்தை உன்னை பிறர் மெச்ச வேண்டும் என நினைக்கிறவன்.
தாய் கடிதமாகிய உனக்கு உறையாக(கவர்) இருக்கலாம். தந்தையோ உனக்கு முகவரி.
தாய் என் பிள்ளை, என் பிள்ளை என உன் உடல் நலம் பேனுகிறவள்.
தந்தையோ உடலை வளைத்து உழைக்கச் சொல்லிக் கொடுப்பவன்.
தாய் மழையில் நீ நனைந்தால் சளிப் பிடித்து விடும் என்பாள்.
தந்தையோ உனக்கு ஆற்றில் நீந்த விட்டு வாழ்கையின் தடைகளை உடைக்க கற்றுக் கொடுப்பவன்.
தாய் வித விதமாக சமைத்து உண்ணக் கொடுப்பாள்.
தந்தையோ தான் அனுபவிக்காத அத்துனையும் தன் பிள்ளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்படுபவன்.
அதற்காக தன் ஆசைகளைக் கூட மாய்த்துக் கொள்பவன்.
தாய் உன்னை நிற்க வைத்து அழகு பார்ப்பாள்.
தந்தை உன்னை ஏதாவது ஓர் உயர் இருக்கையில் இருக்க வைத்து அழகு பார்க்க ஆசைப்படுபவன்.
தாய் உன்னைத் தூக்கிச் சுமக்கிறாள்.
தந்தை உன்னை நடக்க வைக்கிறான்.
அவன் ஒரு பயிற்றுனன்.
தாய் உன் உடல் நலம் போற்றுபவள்.
தந்தை உன் பொருள் நலத்தை யோசிப்பவன்.
அவனை ஹிட்லர் என்கிறீர்கள். அவன் உன்னை ஜெர்மானியனாகவே நேசிக்கிறான். காரணம் அவனுக்கு நீங்கள் யூதர்கள் அல்ல.
தந்தை ஒரு விந்தை. ஆம், அவன் விந்திலிருந்து நாம் உருவானோம்.
Thanks to Engr. Sulthan
Post a Comment