கேரளாவின் ஸ்பெஜல் டிஷ்ஜான அடைப் பிரதமனை வீட்டிலேயே செய்ய முடியுமா? கண்டிப்பாகச் செய்யலாம். பச்சரிசியை ஊறவைத்து, தோசைப் பதத்திற்கு அரைத்துக...

கேரளாவின் ஸ்பெஜல் டிஷ்ஜான அடைப் பிரதமனை வீட்டிலேயே செய்ய முடியுமா?
கண்டிப்பாகச் செய்யலாம். பச்சரிசியை ஊறவைத்து, தோசைப் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மாவை வாழையிலையில் தோசை போல் ரவுண்டாக இழைக் கோலம் போடுவது போல் ஊற்றி, இலையை அப்படியே சுருட்டி மடித்து கொதிக்கும் நீரில் போட்டு வேக விடவும். மாவு வெந்ததும், வாழையிலையைக் குளிர்ந்த தண்ணீரில் போட்டால் வெந்த அடை, இலையிலிருந்து தண்ணீரில் விழும். அந்த அடையை கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நறுக்கிய அடையை சுண்ட காய்ச்சிய பாலில் போடவும். 1 லிட்டர் பாலுக்கு 300 கிராம் சர்க்கரைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிவிடவும்
Post a Comment