அப்பள சப்ஜி தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு அப்பளம் - 2, தனியாதூள், தனி மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - ...

அப்பள சப்ஜி
தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு அப்பளம் - 2, தனியாதூள், தனி மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், எலுமிச்சம்பழச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பொடியாக அரிந்த மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: வெந்தயத்தை முந்தின நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, வெந்தயத்தை, ஊறவைத்த தண்ணீருடன் அதில் சேர்க்கவும். இது சிறிது வெந்ததும், அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி அதில் போடவும். பின்னர் தனியாதூள், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போடவும். எல்லாமாக சேர்ந்து கொதித்து வந்தவுடன் அதில் மல்லித்தழை தூவி, எலுமிச்சம்பழச் சாறை சேர்க்கவும். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள சப்ஜி தயார்! சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
அப்பள சப்ஜி: அப்பளத்துக்குப் பதில் ஏதாவது ஒரு வற்றல் வகையினை சேர்த்தும் செய்யலாம். வித்தியாசமான ருசி கிடைக்கும்.
---------------------------------------------------------------------------
Post a Comment