சூப்பர் டேஸ்ட்டி ரைஸ் தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் & ஒரு கப், வறுத்த சீரகத்தூள் & 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் & ஒரு டேபிள்ஸ...

சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை: உதிரியாக வடித்த சாதம் & ஒரு கப், வறுத்த சீரகத்தூள் & 2 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் & ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு & 3 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா தூள் & ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் & 3 (நீளவாக்கில் நறுக்கவும்), பச்சைப் பட்டாணி & கால் கப் (வேகவைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை & சிறிது, சீரகம், கடுகு & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & கால் கப், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பச்சைமிளகாயை சேர்க்கவும். அதில் சாதம், வேகவைத்த பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும். கரம்மசாலா தூள், தனியாத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
Post a Comment