வேர்க்கடலை கட்லெட் தேவையானவை: காய்ந்த வேர்க்-கடலை - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 3, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு...

வேர்க்கடலை கட்லெட்
தேவையானவை: காய்ந்த வேர்க்-கடலை - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 3, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பிரெட் தூள் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். வேர்க்கடலையை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை தண்ணீரில் போட்டு, உடனே எடுத்துப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு சேர்த்துப் பிசைந்து, விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும்.
Post a Comment