பொன்னாங்கண்ணி கீரை அடை தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை - அரை கப், அவல் பொடி - 1 கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெரிய வெங்காயம் - இரண்டு ...

பொன்னாங்கண்ணி கீரை அடை
தேவையானவை: பொன்னாங்கண்ணி கீரை - அரை கப், அவல் பொடி - 1 கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெரிய வெங்காயம் - இரண்டு டீஸ்பூன் (பொடியாக வெட்டியது), இஞ்சி - அரை டீஸ்பூன் (பொடியாக வெட்டியது), எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், விதை நீக்கிய சிகப்பு மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொன்னாங்கண்ணி கீரையைப் பொடியாக நறுக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு கீரையுடன், அவல் பொடி, பொட்டுக்கடலை மாவு, இஞ்சி, மிளகாய் விழுது, பெரிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கெட்டியான பதத்தில், வாழை இலையில் 'அடை' போல தட்டவும். ஐந்து அல்லது பத்து நிமிடம் காற்றில் உலர வைக்கவும். பின்பு, தேங்காய் சட்னியுடன் சேர்த்து, பொன்னாங்கண்ணி கீரை அடையை பரிமாறினால் சூப்பர் காம்பினேஷனில் சுவை அள்ளும்.
கூடுதல் சிறப்பு: தேகத்தை வலுவாக்கும் வல்லமை பொன்னாங் கண்ணி கீரை அடைக்கு உண்டு. கண்பார்வைத் திறனை அதிகரிக்கும். தலைமுடி உதிருவதையும் தடுக்கும்.
Post a Comment