சமையல் -கேள்வி-பதில்
வத்தக் குழம்பு பொடி அதை எப்படி செய்வது?’’ ‘‘காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 2 கப், தனியா - 4 கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்ப...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_6072.html
வத்தக் குழம்பு பொடி அதை எப்படி செய்வது?’’
‘‘காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 2 கப், தனியா - 4 கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், மிளகு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் (விருப்பப்பட்டால்) - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், விரலி மஞ்சள் - 2. இவை எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் வத்தக் குழம்பு பொடி. வத்தக் குழம்பு, வெந்தயக் குழம்பு போன்றவற்றை வைக்கும்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிதங்களைப் போட்டு, இந்த வத்தக் குழம்புப் பொடியில் 2 டீஸ்பூன் போட்டு, லேசாக வறுத்த பிறகு புளிக்கரைசலை சேருங்கள். குழம்பின் மணம் வீட்டைத் தூக்கும்.’’
Post a Comment