உலர்பழம் கொட்டை பருப்பு லட்டு தேவையானவை: பேரீச்சம்பழம் - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது), தேங்காய் - அரை கப் (துருவியது), முந்திரிப் பர...

உலர்பழம் கொட்டை பருப்பு லட்டு
தேவையானவை: பேரீச்சம்பழம் - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது), தேங்காய் - அரை கப் (துருவியது), முந்திரிப் பருப்பு - 25 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டியது), பாதாம் பருப்பு - 25 கிராம், பிஸ்தா பருப்பு - 25 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: துருவிய தேங்காயை நன்றாக உலர வைக்கவும். பின்பு மேலேயுள்ள கலவைகள் அனைத்தையும், துருவிய தேங்காயுடன், உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடிக்கவும். நடுத்தரமாக இடித்தவுடன் நெய்யைத் தொட்டுக் கொண்டு உருண்டைகளாகப் பிடித்தால் மயக்கும் சுவையில் லட்டு ரெடி. 'உரலுக்கு' எங்கே போவது என யோசிக்கும் நகரவாசிகள் இடிக்காமல் அப்படியே உருண்டை பிடிக்கலாம்.
கூடுதல் சிறப்பு: சர்வ சத்துகளும் நிறைந்த இந்த லட்டுகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால் 'சக்திமானாக' வலம் வருவார்கள். பிஸ்கெட், நொறுக்குத் தீனிகளுக்கு நல்ல மாற்று, இந்த லட்டு.
Post a Comment