ராஜ்மா பிரியாணி தேவையானவை: வேக வைத்த ராஜ்மா & அரை கப், சாதம் & ஒரு கப், தக்காளி & 3, பிரியாணி மசாலாத்தூள் & ஒரு டீஸ்பூன், க...

ராஜ்மா பிரியாணி
தேவையானவை: வேக வைத்த ராஜ்மா & அரை கப், சாதம் & ஒரு கப், தக்காளி & 3, பிரியாணி மசாலாத்தூள் & ஒரு டீஸ்பூன், கிராம்புத்தூள் & அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், தயிர் & 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். மசாலாத்தூள், கிராம்புத்தூள், ஏலக்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறியதும், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர், வெந்த ராஜ்மாவைப் போட்டு நன்றாக கிளறவும். ராஜ்மா மசாலா கிரேவி ரெடி!
பரிமாறும் விதம்: ஒரு சதுர (அ) வட்ட பாத்திரத்தில் முதலில்.. சிறிது சாதத்தைப் பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை பரவலாக ஊற்றி, சிறிது பிரியாணி மசாலாத்தூளை தூவவும். அடுத்து, வேக வைத்த ராஜ்மா மசாலாவை பரப்பவும். கடைசியில் மறுபடியும் மீதமுள்ள சாதத்தை பரப்பி, 2 டேபிள்ஸ்பூன் தயிரை ஊற்றி, மீதம் உள்ள பிரியாணி மசாலாத்தூளை மேலே தூவவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________
Post a Comment