குறைந்த செலவில் ஸ்பெஷாலிட்டி உணவு !'ரெடிகூல்'தயிர் சாதம்
'ரெடிகூல்'தயிர் சாதம் தேவையானவை: அவல் - 1 கப், தயிர் - அரை கப், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகாய், இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மல்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1249.html
'ரெடிகூல்'தயிர் சாதம்
தேவையானவை: அவல் - 1 கப், தயிர் - அரை கப், தேங்காய்ப் பால் - அரை கப், மிளகாய், இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மல்லி, கறிவேப்பிலை - 1 டீஸ்பூன் (பொடியாக வெட்டியது), உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாத்திரமொன்றில் ஒரு கப் அவலைக் கொட்டி, அதன் மேல் அரை கப் தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விடவும். ஐந்து நிமிடம் கழித்து, அவலின் மேல், தயிரையும் தேங்காய்ப் பாலையும் ஊற்றி, மிளகாய், இஞ்சி விழுது, மல்லி, கறிவேப்பிலையையும் போட்டு, உப்பும் சேர்த்து, ஒரு சுற்றுக் கிளறவும். ஒன்றோடொன்று ' மிக்ஸ் ' ஆன பதத்திலிருக்கும்போது, அப்படியே தட்டில் பரப்பினால் 'ரெடிகூல்' தயிர் சாதம் ரெடி.
கூடுதல் சிறப்பு: அல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த உணவு. உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும்.
Post a Comment