அவல் ஃப்ரூட் மிக்ஸர் தேவையானவை: புளிக்காத மாம்பழம் - கால் கப் (தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டியது), நேந்திரம் பழம் - கால் கப், ஆப்பிள்...

அவல் ஃப்ரூட் மிக்ஸர்
தேவையானவை: புளிக்காத மாம்பழம் - கால் கப் (தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டியது), நேந்திரம் பழம் - கால் கப், ஆப்பிள் - கால் கப் (சிறு துண்டுகளாக வெட்டியது), பைனாப்பிள் - கால் கப் (சிறு துண்டுகளாக வெட்டியது), ஊற வைத்த அவல் - 1 கப், தேங்காய்ப் பால் - அரை கப், தேன் - 2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்.
செய்முறை: அகன்ற பாத்திரமொன்றில் மேலேயுள்ள பொடியாக நறுக்கப்பட்ட பழத்துண்டுகளுடன் ஊறவைத்த அவலையும், ஏலக்காய் தூள், சுக்குப் பொடியையும் கொட்டி நன்றாகக் கிளறவும். பின்பு கலவையின் மேல் தேங்காய்ப் பாலையும், தேனையும் ஊற்றவும். கலவையை அப்படியே எடுத்து, கண்ணாடி டம்ளர் ஒன்றில் நிரப்பி, டீஸ்பூன் போட்டுக் கொடுத்தால், நிமிடத்தில் காலியாகிவிடும் அவல் ஃப்ரூட் மிக்ஸர்.
கூடுதல் சிறப்பு: புரதச்சத்தும், தாது உப்புகளும் நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய இந்த உணவு, குழந்தைகளின் சோர்வைப் போக்கும். பள்ளிக்கூடம் முடிந்து சோர்வாக வீடு திரும்பும் குழந்தைகளுக்கு 'இன்ஸ்டண்ட் எனர்ஜியைத்' தரக்கூடியது.
Post a Comment