முளைப்பயறு ஸ்ட்ஃப்டு ஸ்வீட் இட்லி தேவையானவை: அவல் - 2 கப் (ரவை போல திரித்தது), முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், கருப்பட்டி - 200 கிராம் (ப...

முளைப்பயறு ஸ்ட்ஃப்டு ஸ்வீட் இட்லி
தேவையானவை: அவல் - 2 கப் (ரவை போல திரித்தது), முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், கருப்பட்டி - 200 கிராம் (பொடி செய்தது), ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை, தேங்காய்த் துருவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அவலை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பின்பு அவலை சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். இட்லி தட்டில் ஒவ்வொரு உருண்டையாகப் பரப்பவும். பின் இதனுள் முளைப்பயறு, கருப்பட்டி, ஏலக்காய், தேங்காய் சேர்த்த கலவையை ஒரு டீஸ்பூன் அளவு (அ) இரண்டு டீஸ்பூன் அளவு வைத்து அதன்மேல், இன்னொரு அவல் உருண்டையை பரப்பி, (ஆக, ஒரு இட்லி தட்டு குழியில் இரண்டு அவல் உருண்டைகள்), இட்லி வடிவத்தில் அழுத்தவும். ஒரு ஸ்பூனால் இட்லி குழியில் இருந்து பக்குவமாக எடுத்தால் 'முளைப்பயறு ஸ்ட்ஃப்டு ஸ்வீட் இட்லி' ரெடி!
கூடுதல் சிறப்பு: புரதச்சத்து நிறைந்த உணவு இது. பயறு வகைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிட வைக்க, அசத்தலான வழி, 'முளைப்பயறு ஸ்ட்ஃப்டு ஸ்வீட் இட்லி' யைச் சாப்பிடக் கொடுப்பதுதான்.
Post a Comment