முட்டை கோஸ் கூட்டு! தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், முட்டை கோஸ் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்...

முட்டை கோஸ் கூட்டு!
தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், முட்டை கோஸ் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பை வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளி, கோஸை பொடியாக நறுக்குங்கள். வெந்த பருப்பில் இதை சேர்த்து அத்துடன் மிளகாய்தூள், உப்பு, சேர்த்து நன்கு வேகவிடுங்கள். இறக்கி தேங்காய்த் துருவல் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து தாளித்துக் கொட்டுங்கள்.
Post a Comment