பனீர் சமோசா தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர் - தலா அரை கப், பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை, புதி...

பனீர் சமோசா
தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர் - தலா அரை கப், பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதாமாவு, ரவை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக, கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். இதுதான் சமோசா செய்ய மேல் மாவு. இது மிகவும் கெட்டியாக இருந்தால்தான் சமோசா கரகரப்பாக வரும்.
வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், புதினா & மல்லி விழுது, உப்பு, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை சிறிய பூரியாக திரட்டி, பனீர் கலவையை சிறிது உருட்டி பூரியில் வைத்து, முக்கோணமாக மடித்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பனீர் சமோசா ரெடி!
----------------------------------------------------------------------------------------------
Post a Comment