தயிர் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா கால் கப், நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்...

தயிர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா கால் கப், நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்ந்த கலவை - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - அரை கப், புதினா இலை - சிறிதளவு, நெய் - கால் கப், முந்திரிப்பருப்பு - சிறிதளவு, பிரெட் துண்டுகள் - 2, உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, லவங்கப்பட்டை - ஒரு துண்டு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை தவிர மற்ற எல்லா காய்கறிகளையும் தயிரில் போடவும். அரிசியை ஒருமுறை கழுவி தண்ணீரை வடிகட்டி 15 நிமிடம் ஊறவிடவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பிரெட்டை சிறு துண்டுகளாக்கி வறுத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் ஊற்றி, வெங்காயத்தையும் புதினாவையும் வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தயிரில் ஊறவைத்த காய்கறிகளைப் போட்டு, தயிரையும் அதிலேயே விடவும். பிறகு மஞ்சள்தூள், அரைத்த மசாலாதூள், உப்பு சேர்க்கவும்.
அனைத்தும் சேர்ந்து சற்று வதங்கியதும், கடாயில் சிறிது நெய் ஊற்றி, அரிசியை வறுத்து குக்கரில் போடவும். 2 கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் விட வேண்டும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். மேலே பிரெட் துண்டுகள், முந்திரிபருப்பு போட்டு அலங்கரிக்கவும்.
________________________________________
Post a Comment