பெங்காலி புலாவ் தேவையானவை: வடித்த சாதம் & ஒரு கப், பிரிஞ்சி இலை & 1, திராட்சை & ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி & ஒரு டேபிள்ஸ்பூன...

பெங்காலி புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் & ஒரு கப், பிரிஞ்சி இலை & 1, திராட்சை & ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி & ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு & 2, ஏலக்காய் & 1, பட்டை & 1, வெங்காயம் & 1, இஞ்சி விழுது & ஒரு டீஸ்பூன், சர்க்கரை & ஒரு டீஸ்பூன், பால் & ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ & 4 இழை, எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும், சாதத்தை சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டுக் கிளறவும். பாலில் குங்குமப்பூவை கரைத்து, இதில் ஊற்றிக் கிளறவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
________________________________________
Post a Comment