கசகசா மசாலா குழம்பு தேவையானவை: கசகசா, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, புளி - சிறிதளவு, த...

கசகசா மசாலா குழம்பு
தேவையானவை: கசகசா, துவரம்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, புளி - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் துவரம்பருப்பை குழைய வேக விடவும். கடாயில், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில், புளிக் கரைசலை விட்டுக் கொதித்ததும்... வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்துக் கொதிக்க விட்டு, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Post a Comment