நெல்லிக்காய் ஜாமூன் சிரப் தேவையானவை: பெரிய நெல்லிக்காய் & 10, வெல்லம் & ஒன்றே முக்கால் கப். செய்முறை: நெல்லிக்காய்களைக் கழுவித் து...

நெல்லிக்காய் ஜாமூன் சிரப்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் & 10, வெல்லம் & ஒன்றே முக்கால் கப்.
செய்முறை: நெல்லிக்காய்களைக் கழுவித் துடைக்கவும். நோட்புக் தைக்கும் பெரிய ஊசியால், நெல்லிக்காய்களில் ஆங்காங்கே துளை இடவும். அல்லது, சுற்றிலும் கத்தியால், லேசாகக் கீறிவிடவும். ஈரமில்லாத பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் முதலில் மூன்று நெல்லிக்காய்களை போடவும். அடுத்ததாக வெல்லத்தூளைப் போடவும். பிறகு நெல்லிக்காய்களில் மூன்றைப் போடவும். மீண்டும் வெல்லத்தூள், நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேலே வெல்லம்வருவது போல முடிக்கவும். பிறகு, ஒரு சுத்தமான மெல்லிய துணியை பாட்டிலின் வாயில் கட்டி, பிறகு பாட்டிலை மூடி வைத்துவிடவும். இதை 3 வாரங்கள் கழித்துத் திறந்து பார்த்தால், வெல்லம் உருகி, நெல்லிக்காயின் சிரப் சேர்ந்திருக்கும். அதில் ஊறிய நெல்லிக்காய், ஜாமூன் போல சுவையாக இருக்கும். அந்த சிரப்பில் இருக்கிறது அவ்வளவு சத்து!
பயன்: ‘நெல்லிக்காய்’ காயகல்பம் போல. தலைமுடியில் தொடங்கி உடலின் பல பாகங்களை அழகுபடுத்துவது நெல்லிக்காய். இளநரையைத் தடுக்கும். பித்தத்தைப் போக்கும்.
Post a Comment