புளி தீண்டல் தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், தனியாதூள்...

புளி தீண்டல்
தேவையானவை: பச்சரிசி ரவை - 2 கப், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், தனியாதூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை (வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளிக்கவும். பின்னர், அதில் புளியை நன்றாகக் கரைத்து விடவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதித்தவுடன் அரிசி ரவையைப் போடவும்.
ரவை கெட்டியாகி உதிர் உதிராக வெந்ததும், அதில் தனியாதூள், வெந்தயதூள், ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள வேர்க் கடலை இவற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
புளி தீண்டல்: இதில் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை இன்னும் அதிகரிக்கும்.
------------------------------------------------------------------------------
Post a Comment