பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு தேவையானவை: பாகற்காய் வற்றல் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள், கடுக...

பாகற்காய் வற்றல் பொரிச்ச குழம்பு
தேவையானவை: பாகற்காய் வற்றல் - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், புளி - 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு, மிளகு, எள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வறுத்து... ஆற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், மஞ்சள்தூள், பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்தெடுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
Post a Comment