நிலக்கடலை அவல் புட்டு தேவையானவை: அவல் (பொடித்தது) \ 1 கப், வறுத்த நிலக்கடலை \ கால் கப் (ஒன்றிரண்டாக பொடித்தது), தேங்காய்த் துருவல் \ 2 டீஸ...

நிலக்கடலை அவல் புட்டு
தேவையானவை: அவல் (பொடித்தது) \ 1 கப், வறுத்த நிலக்கடலை \ கால் கப் (ஒன்றிரண்டாக பொடித்தது), தேங்காய்த் துருவல் \ 2 டீஸ்பூன், உப்பு \ தேவைக்கு.
செய்முறை: அவலையும், கடலையையும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு புட்டுமாவு பதத்திற்கு பிசையவும். பின், புட்டுகுழலில் தேங்காய்த் துருவலைப் போட்டு அதன் மேல் அவல் கலவையை திணித்து, அதன் மேல் மீண்டும் தேங்காய்த் துருவலைப் பரப்பி, கையால் சற்று இறுக்கமாக புட்டுகுழலில் கலவையை அமுக்கவும். பின்பு ஒரு குச்சியால் குழலின் பின்னால் தள்ளவும். அற்புதமான புட்டி ரெடி. பனங்கற்கண்டு தூள் அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிட இன்னும் சுவை கூடும்.
கூடுதல் சிறப்பு: உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு 'ஊட்டச்சத்து' அளிக்கும் உணவு இது.
Post a Comment