காலில் பித்த வெடிப்பு இல்லை. ஆனால், பாதங்கள் சொர சொரப்பாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிந்து வெளியே செல்லும்போது கால்கள் அவ்வளவு லுக்காக இருப்ப...

காலில் பித்த வெடிப்பு இல்லை. ஆனால், பாதங்கள் சொர சொரப்பாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிந்து வெளியே செல்லும்போது கால்கள் அவ்வளவு லுக்காக இருப்பதில்லை. பாதங்கள் வழுவழுப்பாக என்ன செய்யலாம்?
டோன்ட் வொர்ரி. இரவு படுக்கப் போவதற்கு முன்பாக, வெதுவெதுப்பான நீரை, ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் ஷாம்பூ அல்லது லிக்விட் சோப்பு போட்டு, அதில், பாதங்களை மூழ்கும்படி வைத்து, ஒரு அரைமணி நேரம் ஊற வையுங்கள். பிறகு, கடைகளில் கிடைக்கும் ‘ப்யூமிஸ்’ ஸ்டோனை வாங்கி அதில் சிறிது லிக்விட் சோப்பு போட்டுக் கொண்டு, பாதங்களில் சொர சொரப்பாக உள்ள இடங்களில் நன்கு தேய்த்தால், இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இப்போது ப்யூமிஸ் ஸ்டோனுடன் ‘பெடிக்கியூர் சோப்பு’ என்ற ஒன்றும் கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி பாதங்களின் ஓரங்கள் மற்றும் சொர சொரப்பான இடங்களில் தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கி, பாதங்கள் வழுவழுப்பாகும். இதைத் தினமும் இரவு படுக்கைக்குப் போகும் முன்பாகச் செய்யலாம்.
Post a Comment