கோதுமை உப்புமா தேவையானவை: கோதுமை பொடி ரவை - அரை கப், அவல் ரவை - அரை கப், பொட்டுக் கடலை - இரண்டு டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக வெட்டிய...

கோதுமை உப்புமா
தேவையானவை: கோதுமை பொடி ரவை - அரை கப், அவல் ரவை - அரை கப், பொட்டுக் கடலை - இரண்டு டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக வெட்டியது) - இரண்டு டீஸ்பூன், மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், இஞ்சி (பொடியாக வெட்டியது) - அரை டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு, தேங்காய்த் துருவல் - அரை கப், உப்பு - தேவைக்கு, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் மட்டும்.
செய்முறை: அவல் ரவையையும், கோதுமை பொடி ரவையையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்பு கலவைகள் அனைத்தையும் மீண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக புரட்டியெடுக்கவும். இதனை ஒரு தட்டு தட்டி, சாப்பிடக் கொடுக்கவும்.
கூடுதல் சிறப்பு: எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத, பசியைத் தூண்டும், அற்புத உணவு இது. கோதுமையின் முழுமையான ஊட்டச்சத்து அப்படியே நமக்குக் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.
Post a Comment