சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்-- சமையல் குறிப்புகள்
சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ முட்டை - 4 சாம்பார் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - ...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_9545.html
சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 4
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 1 குழிக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
* முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
* தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
* சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
குறிப்பு
மீனாக இருந்தாலும், கருவாடாக மாறினாலும் நெத்திலி மீன் சுவையை அடித்துக்கொள்ள முடியாது. இதை மணக்க மணக்க குழம்பு செய்வதுபோலவே, மசாலாவில் வறுத்தெடுத்து ருசிப்பதும் ஆனந்தம்தான்.
*************************************************************************
Post a Comment