சுறுசுறு செயல்பாட்டுக்கு மாதுளை---பழங்களின் பயன்கள்
சுறுசுறு செயல்பாட்டுக்கு மாதுளை அடர் சிகப்பு மற்றும் லேசான சிகப்பு நிறத்துடன் முத்துகள் போலவே காணப்ப...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_8266.html

அடர் சிகப்பு மற்றும் லேசான சிகப்பு நிறத்துடன் முத்துகள் போலவே காணப்படும் மதுளை, பார்ப்பதற்கே கொள்ளை அழகா இருக்கும். இதில் புரதம், கொழுப்பு,மாவு,தாதுப் பொருள் போன்ற அடங்கியிருக்கின்றன. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் மாதுளையில் 12முதல் 16சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது. மாதுளை சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால் அதை எடுத்து கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து நாம் சிறப்பாக செயல் பட உதவுகிறது. எந்த உணவை உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த பழத்தை ஜீஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. உடலில் உள்ள உஸ்ணத்தைக் குறைக்கிறது. வெயிலில் அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம். இருமலை தடுக்கும் ஆற்றலும் இதற்க்கு உண்டு. இதன் தோலையும், கிராம்பையும் சேர்த்து கசாயம் செய்து உட்கொள்ளக் கொடுக்க சீதபேதி குணமடையும். தொண்டைப்புண் உள்ளவர்கள் இந்த பழத்தின் சாறுடன் சிறிது படிகாரம் சேர்த்து உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் நாடாப்புழு இருந்தால் மாதுளை மரப்பட்டையுடன் கிராம்பு கலந்து கசாயம் வைத்து குடிக்க புழுக்கள் இறந்து விடும். மார்புச்சளி உள்ளவர்கள் மாதுளைப் பூவைக் காயவைத்து இடித்து பொடியாக்கி நாலைந்து அரிசி எடை அள்வு சாப்பிட்டு வர சளி கரையும். மேலும் வாந்தி,விக்கல், கருப்பையில் உள்ள புண்கள்,மயக்கம்,அல்சர் போன்ற வயிற்றிக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும்.
முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.
அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், சக்தி கூடும். குழந்தைப் பேறும் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தவிர்க்க, கெலாக்ஸ் போன்றவற்றுடன் மாதுளம் பழத்தைச் சேர்த்து பால் ஊற்றி சாப்பிட்டால் ரத்த விருத்தி ஏற்படும்.
Post a Comment