கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்-பகுதி-2
கிளட்ச் பைட்டிங் பாயிண்ட்: பைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும...

https://pettagum.blogspot.com/2012/01/2.html
கிளட்ச் பைட்டிங் பாயிண்ட்:
பைட்டிங் பாயிண்ட் என்று டிரைவிங் ஸ்கூல் டிரைவர்கள் கூறுவார்கள். அதாவது கிளட்சை குறிப்பிட்ட தூரம் வரை விட்டாலும் கார் மூவ் ஆகாது. ஆனால், இந்த பைட்டிங் பாயிண்ட் என்று சொல்லும் இடத்திற்கு கிளட்ச் ரிலீஸ் ஆகும்போதும் கார் மெதுவாக நகரும். இந்த கிளட்ச் கன்ட்ரோலை தெரிந்துகொண்டால் கால் டிரைவர் ஆகிவிடலாம்.
மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இஞ்ச் இஞ்ச்சாக காரை நகர்த்துவதற்கு இந்த பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலிலேயே காரை செலுத்துவார்கள் . ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டிய அவசியமில்லை. வேகமெடுக்கும்போது மட்டும் ஆக்சிலேட்டர் பக்கம் வலது கால் செல்ல வேண்டும்.
ஸ்டீயரிங் கன்ட்ரோல்:
அடுத்து இப்போது கவனிக்க வேண்டியது ஸ்டீயரிங் கன்ட்ரோல். கிளட்ச் கன்ட்ரோலுடன் ஸ்டீயரிங் கன்ட்ரோலும் மிக அவசியம். மேலும், காரின் ஸ்டீயரிங் வீல் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும்.
இப்போது வரும் புதிய கார்கள் அனைத்தும் கிளட்சை சரியாக ரிலீஸ் செய்தாலே 10 கிமீ வேகம் வரை செல்லும். பைட்டிங் பாயிண்ட் கிளட்ச் கன்ட்ரோலை முதலில் தெரிந்துகொண்டு ஒவ்வொரு முறையும் நிதானமாக காரை மூவ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
15 கிமீ வேகத்தை கார் எட்டியவுடன் கிளட்சை மிதித்து இரண்டாவது கியரை மாற்றுங்கள். கிளட்சை முழுவதுமாக ரிலீ்ஸ் செய்துவிட்டு ஆக்சிலேட்டரை கொடுக்க வேண்டும்.
வளைவுகளில் திரும்பும்போது...
பொதுவாக இடதுபுறத்தில் காரை செலுத்த பழகிக்கொள்ளுங்கள். வளைவுகளில் திரும்பும்போது எந்த பக்கம் திரும்ப வேண்டுமோ அதற்கான இன்டிகேட்டரை ஆன் செய்து கொள்வது மிக அவசியம்.
பின்னர் காரின் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு இருபுறமும் வளைவில் பார்த்துக்கொண்டு உங்கள் கார் செல்வதற்கு போதிய இடம் இருந்தால் ஆக்சிலேட்டரை மிதித்து காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
குறுகிய சந்துகளில் திருப்பும்போது காரை உடனடியாக திருப்ப வேண்டாம். பாதியளவுக்கு காரின் முன்பகுதியை தெருவிற்குள் நுழைத்துக்கொண்டு அதன் பின் திருப்பினால் எளிதாக திரும்பும்.

Post a Comment