காரில் கியர் மாற்றுவது எப்படி?- டிப்ஸ்!

கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ...

கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேகத்திற்கு தகுந்தாற்போல் காரில் கியர் மாற்ற தெரிந்துகொண்டால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, கார் ஸ்மூத்தாக செல்லும். இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும். இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள். தவிர, வளைவுகளில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது. தவிர, கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும். தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும். ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும். சரியான வேகத்தில் கியரை மாற்ற பழகிக்கொண்டால், கார் ஓட்டுவதில் நீங்கள் பாதி எக்ஸ்பர்ட் என்பது மட்டுமல்ல, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.

Related

ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்!

அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள். எந்த விஷயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள். அதிகாலையில் 5 - 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள். தினமும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். ...

இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்!

என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம...

எதை எதை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது? 1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2.வாழைப்ப...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 4:13:27 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,513

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item