புளிப்பான டிப்ஸ்--வீட்டுக்குறிப்புக்கள்
புளிப்பான டிப்ஸ் தண்ணீரில் புளியை நன்கு கொதிக்க வைத்து உப்புசேர்த...

புளிப்பான டிப்ஸ்
தண்ணீரில் புளியை நன்கு கொதிக்க வைத்து உப்புசேர்த்துஜஸ்பெட்டியில்வைத்துக்கொண்டால்சமையல் நேரத்தை மிச்சப்படுத்தலாம்
குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.
ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்து விடும்
தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால், ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.
பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
Post a Comment