உடல் எடை குறைய டிப்ஸ்--உபயோகமான தகவல்கள்,
உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டு விட்டீர்களா? எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்க...
உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டு விட்டீர்களா? எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள்!
உங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடை BMI – Body Mass Index எனப்படுகிறது.
இந்த இணையத்தில் உங்கள் உயரத்தினையும், உடல் எடையையும் கொடுத்து உங்களது உடல் எந்த வகையைச் சேர்ந்தது எனத் தெரிந்து கொள்ளுங்கள்!
Underweight = BMI <18.5
Normal weight = BMI: 18.5–24.9
Overweight = BMI: 25–29.9
Obesity = BMI of 30 or greater
Click Here to Know Your BMI Online!
உடல் எடை குறைய வாழ்க்கை முறையை மாற்றலாமே!
வீடோ அலுவலகமோ மாடியில் உள்ளதா. Lift மற்றும் Escalator களை மறந்து விடுங்கள். படிக்கட்டுக்களை உபயோகியுங்கள்.
அலுவலகம் வீட்டின் அருகில் இருந்தால் கார், பைக் தவிர்த்து நடந்தே செல்லுங்கள். பெட்ரோல் விற்கிற விலையில் பர்ஸும் பத்திரமாக இருக்கும். உடலும் திடகாத்திரமாக இருக்கும்.
TV பார்த்துக் கொண்டே உணவு உண்பது, Cell Phone ல் பேசிக் கொண்டே உண்பது போன்றவற்றை தவிருங்கள். அதே போல் நொறுக்குத் தீனிகளையும், காரணம் உங்களை அறியாமலேயே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவீர்கள் என்பதே!
நின்று கொண்டே சாப்பிடுவதை முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுங்கள்.
பொறுமையாக உட்கார்ந்த படி நன்றாக மென்று சாப்பிடுங்கள். ”நொறுங்கத் தின்றால் நூறு வயது” என்று சும்மாவா சொன்னார்கள்!
உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள். காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை உணவு நாள் முழுக்க சுறு சுறுப்பாக இயங்குவதற்கு உங்களுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கும். இரவு நேரத்தில் உடல் உழைப்பு எதுவும் இல்லாததால் அதிகம் உண்பது கொழுப்பு தேங்கி விட வழி வகுத்து விடும். எனவே இரவில் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று!
உணவு உண்ண சிறிய தட்டினைப் பயன்படுத்துங்கள். குறைவான உணவானாலேயே தட்டு நிறைந்து விடுவதால் மனத் திருப்தியை இது அளிக்கும்.
உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்
சாப்பிடலாம் வாங்க!
தினமும் எட்டு முறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் அதிகமாகக் குடிப்பது கொழுப்பைக் கரைத்திட உதவும். மேலும் கோடை காலங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைத் தடுக்கும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க வேண்டும். உடல் Dehydrate ஆவதை எடைக் குறைப்பு என்று தவறாக எண்ணிவிட வேண்டாம்.
புரதச் சத்து நிறைந்த மீன் உணவுகளை நிறைய சாப்பிடலாம். இதில் உள்ள Omega 3 Fatty Acid உடல் எடை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதயத்திற்கும் இதமானது.
பச்சைக்காய்கறிகளை உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் நறுக்கி துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் உணவுக்கு முன் சிறிது சாப்பிடுங்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு நீங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க உதவும்.
முட்டைக்கோஸ்,குடை மிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.
எண்ணையில் பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வாழைப்பழம்,ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் நார்ச் சத்து நிறைந்த முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
தவிர்க்கலாம் வேண்டாங்க!
உப்பு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். தினமும் தேவையான சோடியத்தின் அளவு 2300 mg மட்டுமே. அதிகமான உப்பு உடலில் நீர்ச்சத்து ஏற வழிவகுப்பதோடு இதய நோயையும் ஏற்படுத்தி விடும்.
உடல் எடை அதிகரிப்புக்கு துணைபுரியும் ஆல்கஹால் மற்றும் Carbonated Beverages குளிர்பதனங்களை தவிர்த்திடவும்.
கொழுப்பு நிறைந்த Ice Cream ஐத் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக தேவைப் பட்டால் Ice Cubes பயன்படுத்துங்கள்.
மைதா மாவினால் செய்யப்படும் பரோட்டா வகைகளைத் தவிர்த்து விடுங்கள். இது செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படும். மாறாக கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி வகை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகள், கிழங்கு வகை உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள், நெய், சீஸ், வெண்ணெய், சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
உடல் எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் 10,000 அடிகளை நோக்கமாகக் கொள்ளுங்கள். Pedometer என்னும் சாதனம் உங்களது அடிகளைக் கணக்கிட்டுக் காட்டும். 800 ரூபாயிலிருந்து இது கிடைக்கிறது. தற்போதுள்ள பெரும்பாலான Mobile Phone மற்றும் Ipod களிலும் இது உள்ளது! உடல் எடை குறைப்பதில் பெரும்பங்காற்ற உதவும் Pedometer பற்றி மேலும் அறிய இணையம்!
ஜிம்மிற்கு செல்லும் முன் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக நேரம் செய்யாதீர்கள். உடற்பயிற்சிகளுக்கிடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது Heart Rate என்னவோ அதனை கட்டுக்குள் வைத்திருங்கள். Heart Rate கண்டுபிடிக்க உதவும் இணைய தளம் இதோ. இப்போதுள்ள பெரும்பாலான இயந்திரங்களில் Heart Beat Rate பார்க்கும் வசதி உள்ளது. இல்லையா… கவலை விடுங்கள். 6 நொடிக்கு இதயம் எவ்வளவு முறை துடித்ததோ அதனை 10 ஆல் பெருக்குங்கள்! உங்கள் இதயத்துடிப்பு அளந்துவிடலாம். பெரும்பாலான மருத்துவர்கள் உபயோகிக்கும் முறை இது தான்!
Click Here to Know your Heart Rate Online!
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்கு நேரம், போக உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேளுங்கள்.
உங்களுக்கு பிடித்த நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான உடற்பயிற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு Tread Mill, Cross Trainer, Biking, Cycling, Walking போன்றவை!
நீங்கள் Gym ல் செய்யும் உடற்பயிற்சியின் பெயர், அது ஏன் செய்ய வேண்டும்? Arms, Shoulder , Triceps, Chest, Biceps போன்றவை பலம் பெற என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பது பற்றிய விவரங்கள் Fitnessbliss இணையதளத்தில் படங்களுடன் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைத்து நலமுடனும், எல்லா வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!
Post a Comment