மின்சக்தியினை சேமித்திட---உபயோகமான தகவல்கள்

மின்சக்தியினை சேமித்திட வீட்டு உபயோகம் மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத...

மின்சக்தியினை சேமித்திட வீட்டு உபயோகம் மின் விளக்கு அமைப்புகள்: 1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி. 2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும். 3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும். 4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும். 5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில் மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம். 6) சாதாரண குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல் விளக்குகளைப் பயன்படுத்தவும். 7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும். 8) குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக் சோக்குகளை உபயோகிக்கவும். 9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய 5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும். 10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள், நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின் மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவை மின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும் உதவுகின்றன. 11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம். மின்விசிறி 1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும். 2) மின்விசிறிகளில் ரெகுலேட்டர்களை உபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது. 3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும். 4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும். 5) மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும். கிரைண்டர் 1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும். 2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும் உபயோகிக்கவும். 3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும். 4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில் அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும். வாஷிங் மெஷின் 1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே உபயோகிக்கவும். 2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும். குளிர்சாதனக் கருவி 1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியை தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும். 2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும். 3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். 4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன் தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும். 6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்த எரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை வாங்கி உபயோகப்படுத்த வேண்டும். ------------------------------------------------------------------------------------------------ மின்சக்தியினை சேமித்திட---உபயோகமான தகவல்கள் 1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை "அயர்ன்" செய்வதை தவிர்த்து, ஒரே நேரத்தில் மொத்த துணிகளை "அயர்ன்" செய்யவும். குளிர்பதனப் பெட்டி 1) குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம் ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும். 2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடி திறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும். 3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும். 4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும். 5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கி பயன்படுத்துதல் வேண்டும். 6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும். நீர் ஏற்றும் பம்பு 1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும். 2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும். 3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும். 4) நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும். 5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை தெரிவிக்கும்/கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும். நீர் சூடேற்றி 1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து தவிர்க்கவும். 2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும். 3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும். கணினி 1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினை வீணடிக்கிறது. 2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை செலவழிக்கிறது. 3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர் மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன. 4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு
நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.

Related

உபயோகமான தகவல்கள் 1208113234758753307

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item