டிபன் டிப்ஸ்...சமையல் அரிச்சுவடி
ஹோட்டல் ஸ்பெஷல் தோசை: தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுத்துஉடன் கால் கப் கடலைபருப்பு சேர்த்து அரைத்தால் ஹோட்டல் ஸ்பெஷல் மொருமொரு தோசை கிடைக்...


தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுத்துஉடன் கால் கப் கடலைபருப்பு சேர்த்து அரைத்தால் ஹோட்டல் ஸ்பெஷல் மொருமொரு தோசை கிடைக்கும்.
சாப்ட் சப்பாத்தி: சப்பாத்தி செய்யும்போது.. வெதுவெதுப்பான தண்ணீரில் தயிர், உப்பு சேர்த்து பிசைந்து,பதினைந்து நிமிடம் ஊற வைத்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி சாப்ட் ஆஹா இருக்கும். உடனடியாக சப்பாத்தி ரெடி.(அதிக நேரம் வைக்க ஊற வேண்டாம் அரைமணிநேரத்துக்குள் சுடவும். மாவு புளித்து விடும).
மல்லிகை இட்லி: இட்லிக்கு மாவு அரைக்கும்போது,உளுத்து உடன் ஒரு கைப்பிடி அவலை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சேர்த்து அரைத்தால் இட்லி மல்லிகை போல் வெண்மையாக சாப்ட் ஆஹா இருக்கும்.
மொறுமொறு வடை: வடைக்கு அரைக்கும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
காலையில் பாலில் கார்ன் பிளாக்ஸ் சாப்பிடும்போது, இரவில்( ஒருத்தருக்கு நான்கு பாதாம் என்ற அளவில்) ஊற வைத்து காலையில் கொஞ்சம் பால் விட்டு அரைத்து,பின்னர் கார்ன் பிளாக்ஸ் கூட பாலில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாவும், நல்ல சத்தான காலை சிற்றுண்டியாகவும் இருக்கும்.
Post a Comment