சிக்கன் சுக்கா வறுவல் வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்க...

சிக்கன் சுக்கா வறுவல்
வறுவல் வகைகளில் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா வறுவல். செட்டிநாடு மசாலா கலவையில் சிக்கனை வறுத்து சாப்பிட்டுப் பாருங்கள், மணத்துக்கு மணம், ருசிக்கு ருசி! செய்ய தயாராகலாமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4
மிளகு, சோம்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
மராட்டி மொக்கு - 3
அன்னாசிப்பூ - 3
கடற்பாசி - 5 இதழ்
தனியா - 4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பச்சைமிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 250 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 250 கிராம் (நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கொப்பரைத் தேங்காய் - தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
செய்முறை
* வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகாய், லவங்கம், ஏலக்காய், பட்டை, கடல்பாசி, மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை (தேவைப்பட்டால் கொப்பரைத் தேங்காய் சேர்க்கலாம்) ஆகியவற்றை வெறுமனே வறுத்து ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
* அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய்விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளியையும் சேர்த்து அனைத்தும் நன்கு கலந்து திக்காக மாறும்வரை வதக்கவும்.
* இப்போது நன்கு கழுவி சுத்தப்படுத்தி நறுக்கிய சிக்கனை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து இதை வேகவிடவும்.
* சிக்கன் முக்கால் பாகம் வெந்தபிறகு பொடித்து வைத்துள்ள மசாலாவை மூன்றரை ஸ்பூன் சேர்த்து, பச்சை வாசனை போக கிளறி மசாலா நன்கு திக்கானதும் இறக்கவும்.
* சிக்கன் டிக்கா வறுவலை இதை டிபன் சாதம் வகையறாக்களுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
* செட்டிநாடு மசாலா கலவையை முதலில் ரெடி செய்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். இந்த மசாலா கலவை இரு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Post a Comment