10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்...

10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, 100 கிராம் உப்பு சேர்த்து பிசறி, 2 நாட்கள் வைத்திருந்து அத்துடன் வறுத்து, பொடித்த பெருங்காயம், வெந்தயம், மிளகாய் வற்றல் கலவையை கலந்து, லேசாக மஞ்சள்பொடி சேர்த்து, சூடான நல்லெண்ணெயை ஊற்றி, ஊறுகாய் போல் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சுரம் வந்தபின் நாக்கசப்பு உள்ளவர்கள், நாவில் ருசி தோன்றாதவர்கள் இதனை ஊறுகாய் போல் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சேர்த்துவரலாம். 10 நாரத்தை காய்களை முழுதாக நீரில் போட்டு லேசாக வேகவைத்து, நீரை நீக்கி, மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி, 2 அல்லது 3 நாட்கள் கழித்து நீர் நன்கு உலர்ந்ததும், வெயிலில் நன்கு சக்கையாக வறண்டுபோகும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுரம், பசியின்மை, அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற நிலைகளில் தோன்றும் நாக்கசப்பு மற்றும் ருசியின்மை நீங்க இதனை நாவில் போட்டு சப்பி வரலாம் அல்லது உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை குறைத்து பயன் படுத்தலாம்.
Post a Comment