தலை முதல் பாதம் வரை - 3-- ஹெல்த் ஸ்பெஷல்
தலை முதல் பாதம் வரை - 3 முகத்தில் சுருக்க வரிகள் நீங்க ~~~~~~~~~~~~~~~~~~~~~...

https://pettagum.blogspot.com/2012/01/3_07.html
தலை முதல் பாதம் வரை - 3
முகத்தில் சுருக்க வரிகள் நீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கசகசா - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
முழு உளுத்தப்பருப்பு - 5
இவற்றை ரவை போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை
கலந்து பேஸ்ட்டாக்குங்கள்.
வராம் ஒரு முறை இந்த பேஸ்ட்டால் முகத்தில்
5 நிமிடம் மசாஜ் செய்துவாருங்கள். சுருககம்
முற்றிலுமாக நீங்கி, முகம் படு இளமையாகிவிடும்.
பருக்கள் மறைய
~~~~~~~~~~~~~~~~~
புதினா சாறு - 1 டீஸ்பூன்
வறுத்து அரைத்த உளுத்தப்பருப்பு - 1 டீஸ்பூன்
சந்தனம் - 1/4 டீஸ்பூன்
இவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குகள்.இதை
பருக்களின் மேல் பூசி,உலர்ந்ததும் கழுவி
வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்து வந்தால்
பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.
Post a Comment