பியூட்டி டிப்ஸ் 10--அழகு குறிப்புகள்
பியூட்டி டிப்ஸ் 10 1. ஆரஞ்சு சீசனின் போது ருசியான அந்த பழத்தை சாப்பிட்டு விட்டு, தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். தோலை நிழலில் உலர்த்திப்...
2. வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிரு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச்சாறை முகத்தில் தடவி, மூன்று நிமிடங்களுக்கு காய விட்டு கழுவிக் கொள்ளலாம். வெங்காயத்தை மசித்து 4 சொட்டு தேன் கலந்து பேக் போட்டுக் கொண்டால் முகச் சுருக்கம் நீங்கும்.
3.காலில் வெடிப்பு அவதிப்படுத்திகிறதா? கவலை வேண்டாம் சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்கு மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்பு மறைந்து கால் கூடுதல் அழகு பெறும்.
4.புதினா பருக்களின் எதிரி. இதை விழுதாக அரைத்து பற்றூப் போட்டால், பருக்கள் மறைந்து விடும். குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு புதினா இலைகளைத் தூவி,பிறகு குளித்தால் அன்றைக்கு முழுவதும் உடல் சுறு சுறுப்பாய் இயங்கும்.
5.உருளைக் கிளங்கை தோல் சீவித் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அத்துடன் தேன் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற விட்டுக் கழுவலாம். அற்புதமான பேக் இது. முகம் பளிச்சென்று மாறும்.
Post a Comment