யு டர்ன் போடும்போது ... ஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத...
யு டர்ன் போடும்போது ...
ஸ்டீயரிங் வீலில் ஒன்றரை ரவுண்டு சுற்றும் அளவுக்கு ப்ளே இருக்கும் என்று முன்பு கூறினோம் அல்லவா. அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வளைவாக இருந்தால் ஸ்டீயரிங் வீலில் பாதி ரவுண்டு திருப்பினாலே கார் பெரிய வளைவுகளில் அட்டகாசமாக திரும்பும்.
சிறிய வளைவுகளில் திரும்பும்போது ஒரு ரவுண்டு ஸ்டீயரிங்கை திருப்பிக்கொண்டால் கனக்கச்சிதமாக திரும்பும். இதேபோன்று, யு டர்ன் போடும்போது முழு ரவுண்டு அதாவது ஒன்றரை ரவுண்டும் திருப்பினால் அழகாக யு டர்ன் போட்டுவிடலாம்.
வேகத்தடையில் ஏறி இறங்கும்போது...
வழியில் சிறிய வேகத்தடை இருந்தால் வேகத்தை முழுவதுமாக குறைத்துக்கொண்டு முதல் கியரை மாற்றி சிறிது தூரத்துக்கு முன்னரே கிளட்சையும், பிரேக்கையும் ரீலிஸ் செய்துவிடவும்.
கார் தானாகவே அழகாக தவழ்ந்து எந்த வித பாதிப்பு இல்லாமல் வேகத்தடையை கடந்துவிடும். இப்போது ஆக்சிலேட்டரை கொடுத்து வேகத்துக்கு தகுந்தாற்போல் கியரை அடுத்தடுத்து மாற்றுங்கள்.
அகலமான அல்லது பெரிய வேகத்தடை இருந்தால் இரண்டாவது கியரில் வைத்து காரை மேற்சொன்னது போல் மூவ் செய்யவும். தேவையான இடங்களில் கண்டிப்பாக ஹாரன் அடிக்க மறக்காதீர்.
பிரேக் பிடிக்கும்போது...
தற்போது வரும் கார்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவை. எனவே, பிரேக்கை லேசாக அழுத்தினால் போதுமானது. புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதே பிரேக்கை அழுத்தும் முறையையும், கன்ட்ரோலையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இரவில் ஓட்டும்போது கவனம்...
புதிதாக கார் ஓட்டுபவர்கள் இரவில் கார் ஓட்டும்போது கூடுதல் கவனத்துடன் ஓட்ட வேண்டியது அவசியம். ஸ்டீயரிங் கன்ட்ரோல், கிளட்ச் கன்ட்ரோல் வந்துவிட்டதா சரி காரை வாங்கிவிட வேண்டியதுதான் என்று கிளம்பிவிட்டீர்களா. பொறுங்கள். பார்க்கிங் மற்றும் ரிவர்ஸ் கியரில் காரை மூவ் செய்வது குறித்து விரைவில் மற்றொரு பகுதியில் பார்க்கலாம்.
Post a Comment