கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்-பகுதி-1
வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதல...

https://pettagum.blogspot.com/2012/01/1.html

வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில் சாலை விதிமுறைகளையும், டிரைவிங்கையும் முழுமையாக கற்றுக்கொண்டு புது காரில் ஏறி உட்காருவது நல்லது. டிரைவிங் ஸ்கூலுக்கு போய் குறைந்தது 10 மணிநேரமாவது பயிற்சி பெற்று பின்னர் காரை வாங்குவது உத்தமம். தற்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டுவது பெரிய சவாலான காரியமாகவே உள்ளது. குறிப்பாக, நகர சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்தவர்களே படாத பாடு படுகின்றனர். இந்த நிலையில், புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரும்ப தகாத சம்பவங்களை தவிர்த்து ஒரு முழுமையான டிரைவராக மாறிவிடலாம். புதிதாக கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை காணலாம். சீட் பெல்ட்: கார் இருக்கையில் அமர்ந்தவுடன் முதலில் விரட்ட வேண்டியது தேவையில்லாத பதட்டத்தைத்தான். கார் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடனேயே ரிலாக்ஸ்டாக முதலில் செய்ய வேண்டியது சீட் பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும். கார் ஏபிசி தெரிஞ்சிக்கலாம்... அதாவது, ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச் என்ற காரின் 3 கன்ட்ரோல் மும்மூர்த்திகளைத்தான் சுருக்கமாக ஏபிசி என்று குறிப்பிடுகின்றனர். கிளட்சில் இடது காலையும், ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு வலது காலையும் பயன்படுத்தவும்.

Post a Comment